Thursday, January 6, 2011

மதுவந்தி - கல்வித்துறையின் பூலான் தேவி

மதுவந்தி என்பவள் ஒரு திரைப்பட நடிகனின் உறவு. இவள் காலிபர் என்னும் குழந்தைகள் பள்ளியைத் தொடங்கினால். அமெரிக்காவிலிருந்து வந்த இவள் சென்னையில் தொடங்கிய மழலையர் பள்ளிக்கூடம் கடந்த ஆண்டு ஆஹா ஓஹோ என்று மேட்டுக்குடியினரால் புகழ்ந்து பேசப்பட்டது. இரண்டு வயது கூட நிரம்பாத மழலையருக்கு "அமெரிக்கக் கல்வியை" அள்ளித் தரப்போகிறேன், வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என இவள் சாற்றிய பறையோசையைக் கேட்டு செவிடான பணக்கார பெற்றோர்கள் பலர் மதுவந்தி பரப்பிய நாற்றத்தை நறுமணம் என்று தவறாகக் கருதி தத்தம் குழந்தைகள் ஒவ்வொருவரின் பேரிலும் எழுபது ஆயிரம் ரூபாய்கள் வரை கல்விக் கட்டணமாகக் கட்டி முதலில் மகிழ்ந்தனர். ரூபாயின் போதையில் நேர்மை, சட்டம், வரப்போகும் அவப்பெயர், சிறைவாசம் என்பனவற்றை மறந்த பணப்பேய்கள் தம்முடைய தன்மானம் உட்பட எதையும் இழக்கத் தயார் என்பதற்கு எடுத்துக் காட்டாக பணவெறி பித்தேறி மதுவந்தினி தன பெயருக்கு ஏற்றாற்போல் மதுவின் பித்தேறி குழந்தைகளின் பெற்றோரிடம் பற்பல காரணங்களுக்காக மேலும் மேலும் பல்லாயிரம் பணம் கறக்க முற்பட்டுள்ளார்.


தமிழ் நாடு அரசின் கல்ல்வித் துறையோ அமைச்சகமோ அளிக்காத அனுமதியைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாது மதுவந்தி "அமெரிக்கன் சிஸ்டம்" கல்வி என்ற முகத்திரையின் பின்னால் பலரிடம் பல லட்சம் பணங்களை பகல் கொள்ளை அடித்து தன உறவினன் ஒய். ஜி. மகேந்திரனையும் விட சிறந்த நடிகை தானே என்று ஊரறிய தன்னை உரித்துக் காட்டியிருக்கிறாள்.


தமிழ் நாட்டின் நகரமன்றங்கள் - முனிசிபாலிட்டிகள் - நடத்தும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் மாணவிகளும் பள்ளியிறுதி தேர்வுகளில் முதலாம் மதிப்பெண்கள் பெறுவோராக இருக்க, சென்னை நகரத்து பணத் திமிர்கொண்ட பெற்றோர்கள் மதுவந்தி போன்ற தன்னலக் கொண்டான்மார்களின் தாளிப்பில் கருகிய கடுகுகளாய் வாடி, வதங்கி, நிறம் மாறி தற்போது தங்களின் மழலைகளை அரசாங்கம் நடத்தும் பள்ளிகளை நோக்கி அனுப்புகின்றனர்.


செவ்வாய் , May 18, ௨0௧0 அன்று எம் இணைய தளத்தின் இதே பகுதியில் யாம் எழதிய இது குறித்த கடிதத்தில் யாம் மதுவந்தி நடத்தும் "காலிபர்" பள்ளியைனைக் குறித்து எச்சரித்துள்ளோம்.


கல்வியை கடைச் சரக்காக மாற்றிடும் மதுவந்தி போன்ற கயவர்களை இனியேனும் நாம் நம்புதல் நம்மை நாமே அழிக்கும் அவமாகும்.

1 comment:

  1. உங்களின் விழிப்புணர்வுத் தொண்டிற்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
    /தமிழே விழி! தமிழா விழி /
    எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

    ReplyDelete