Tuesday, June 8, 2010

முட்டாள்கள் எழுத்தாளர்கள் என்றானால்....

பாலசுப்பிரமணியன் என்ற சமுதாயப் புல்லுருவி தன்னை எதோ ஒரு ஆராய்ச்சியாளன் என்று எண்ணிக்கொண்டு எழுதி விடுத்த ஒரு சாதி இனவாத நூலை திரிசக்தி பதிப்பகம் என்ற நூல்வெளிஈட்டகம் பதிப்பித்துள்ளது. இந்த நூலின் கருத்து தமிழின மறைப்பும் எதிர்ப்புமாக உள்ளதால் இத்தகைய நூல்களை நம் தமிழின மக்கள் குப்பையில் ஒதுக்கித்தள்ள வேண்டும். இதனிமித்தம் யாம் திரிசக்தி பதிப்பகத்தார்க்கு விடுத்த வேண்டுகோளாகிய மின்னஞ்சல் பின்வருமாறு.


அன்புடையீர் வணக்கம்.

சுப்பு (பாலசுப்ரமணியம்) எனும் ஒருவர் எழுதிய திராவிட மாயை என்ற நூலின் மதிப்புரையை வானளாவப் புகழ்ந்து இணைய தள வலைகளில் குறைகுடங்கள் சில கண்டபடி எழுதியுள்ளதை அறிந்து சிரிக்க நேர்ந்தது. தங்களின் அச்சகமோ பதிப்பகமோ சமுதாயத்தில் மீண்டும் ஏற்றத்தாழ்வுகளை சாதி மத பேதங்களாக வளர்க்க உதவும் விதமாக இத்தகைய இழிவு நூல்களை வெளியிடுவதால் என்னதான் நன்மை விளையுமோ? மாறாக வர்க்க பேதங்களும், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நிலையில் இன மத வேறுபாடுகளும்தான் விளைச்சலாக அமையும். நம் இனிய இந்திய நாட்டை இன்று சீரழிப்பது கிரிகெட் சூதாட்டமும், நம் பண்பாடுகளை வேருடன் அறுக்கும் திரைப்படங்களும்தான். நம் இளைய சமுதாயம் கல்வி கேள்விகளிலும், உழைப்புத் திறனிலும் சிந்தனை ஆற்றலிலும் வறகோடாகத் தேய்ந்துபோக கிரிக்கெட் சூதாட்டமே சூலகமும் கருவறையும் ஆகும். இது குறித்து நூல் எழுதுவோரைத் தேடிப்பிடித்து நூல் வெளியிடுவதை விடுத்து சமுதாயத்தில் பிளவுகளை உருவாக்கும் புல்லுருவிகளை வைத்து ஆரியம் / திராவிடம் என கவைக்குதவாத கதைகளை நூலாக வெளியிடுவதால் நீங்கள் மக்களுக்குப் புரியும் சேவைதான் என்ன? வேற்றுமையை அன்றோ விதைக்கிறீர்கள்? ஒரு முட்டாள் அரசியல் சாக்கடையில் நெளிந்து தான் நுகர்ந்த துர்நாற்றத்தைப் பிறரும் நுகரட்டும் என்று கதை விற்கப் புறப்பட்டால் அதற்கு உடந்தையாக நீங்களும் போகலாமா?

சுப்பு என்ற பாலசுப்பிரமணியம் போன்றோர் சமுதாயப் புல்லுருவிகள். மத இன சாதி பேதங்களை வளர்க்கும் சண்டாளர்கள். இவர்கள்தான் ஒருங்கிணைந்த இந்தியத் திருநாட்டினை உருக்குலைக்க நினைக்கும் நக்சலைட் தீவிரவாதிகளுக்கே நிகரான தேசத்துரோகியர். யாருக்கு வேண்டும் திராவிடம்? யாருக்குத் தேவை ஆரியம்? இந்து மதத்தால் விளைந்த சாதிகளால் நம் ஒருமைப்பாடு உருக்குலைந்தது போதாதா? இன்றையத் தேவை இன்னொரு ஈ. வே. ரா. பெரியார்தான். இன்னொரு கோபாலகிருஷ்ண கோகலேதான். மகாத்மா புலே தான். குலக்கல்வியை தமிழகத்தில் கொண்டுவர முயற்சித்த நல்லான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி வேண்டாம். மத பேதத்தின் வகுப்பசிரியன் நரேந்திர மோடி வேண்டாம். உங்களுடைய பதிப்பகம் எதற்கு வகுப்பறை என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள். பேதங்களை வளர்க்காதீர்கள். பிரிவினையைத் தூண்டாதீர்கள்.

"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப்
போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்
அறிஞர் தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் வளங்கள் எல்லாம் - நம்மைச்
சேர்ந்திடக் காணச் செய்வோம்!"

----பாவேந்தர் பாரதிதாசனார்.

நன்றி.

No comments:

Post a Comment