தமிழ் நாட்டுக்கு
தி டைம்ஸ் ஆப் இந்தியா
நாளிதழ் புரியும்
இரண்டகமும் கெடுதலும்
ஒருவழியாக வடநாட்டு மாநிலங்களில் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியாகும் எல்லா இந்தியப் பெருநகரங்களிலும் இளைஞர்களை கிரிக்கெட் விளையாட்டில் பைத்தியங்களாக மாற்றிவிட்டு அவர்களின் எதிர்காலங்களை கல்வி என்னும் வெளிச்சத்தில் நுழையவிடாது தடுத்து அழித்துவிட்டு இப்போது சென்னைக்குள் நுழைந்துள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிவு வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்களுக்கும் சிறந்ததோர் தோணிபோல வறுமைக் கடலைக் கடக்க பலருக்கு உதவிய இந்த நாளிதழ் நாள்தோறும் கிரிக்கெட் குறித்த செய்திகளையே இன்று அளவுக்கதிகமாக வெளியிட்டு தமிழ் நாட்டு மக்களை சர்வநாசம் செய்துவருகிறது. மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரின் உயர்விற்கு உதவும் வகையில் இந்த நாளிதழின் செய்திகளோ கட்டுரைகளோ படித்தறிய உதவுமாறில்லை. மாறாக சச்சின் டெண்டுல்கர், டோனி, யுவராஜ் சிங் போன்றோர் விளையாடும் கிரிக்கெட் சூதாட்டத்தைப் பற்றி பக்கம் பக்கமாக விடாது நாள்தோறும் எழுதி சென்னைவாழ் மக்களை மும்பை நகரத்து மக்களைப்போல் கிரிக்கெட் பைத்தியங்களாகவும், உலகறியா முகடிகளாகவும் மாற்றிவருகிறது. வீரர்கள் என்று வருணிக்கப்படும் கிரிக்கெட் சூதாடியரின் வண்ணப் படங்களை மிதமிஞ்சிய அளவில் பல வகைகளாக அச்சடித்து அவர்களை அப்துல் கலாம் போன்ற அறிவாளிகளைவிட நம் அன்னைத் திருநாட்டைக் கடைத்தேற்றும் கடவுளராகச் சித்தரிக்கின்றது இந்த நாளிதழ்.
கோடிக்கணக்கான பணத்திற்கு நாள்தோறும் அதிபதிகளாகிவரும் கிரிக்கெட் சூதாடியரை தோலுரித்து அடையாளம் காட்டுவதைவிடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கிரிக்கெட் சூதாட்டத்திற்கு ஆலவட்டம் சுழற்றுகிறது. பால் உணர்வினைத் தூண்டும் படங்களையும் செய்தி விபரங்களையும் நாள்தோறும் வெளியிட்டு இந்த நாளிதழ் தமிழ் நாட்டினை நாசம் செய்கிறது. அறிவிற்குகந்த செய்திகள் எதுவுமே இதில் வெளியாவதில்லை.
தமிழ் நாட்டிலிருந்து இந்த நாளிதழ் ஒரு நாள் விரட்டியடிக்கப்பட்டு வெளியேறி ஓடப்போவது நிச்சயம்.

No comments:
Post a Comment